இந்திய பெருங்கண்டத்தில் குறிப்பாக தமிழகத்தில் தன்னலம் பாராமல் பொதுநலத்திற்கு உழைத்து நமது கலாச்சார விழுமியங்கள் மற்றும் மக்களின் நலனை பாதுகாக்க வாழ்நாளை தியாகம் செய்த தாய்மார்களின் தன்னலம் கருதாத தவ வாழ்க்கையை வருங்கால சந்ததியினருக்கு எழுப்புவது கர்மயோகினி சங்கமத்தின் நோக்கமாகும்.
இந்திய பெருங்கண்டத்தில் கலாச்சாரத்தை பாதுகாத்து சமூக சீர்திருத்தங்களை மேற்கொண்ட வீரமங்கை சாத்வி ராணி அஹில்யா பாய் ஹோல்கர பிறந்த 300 வது ஆண்டு விழாவும், சேவா பாரதி வைபவ ஸ்ரீ மகளிர் சுய உதவிக் குழு திட்டத்தின் 25-வது ஆண்டு விழாவும் மற்றும் மகளிர் (ம) சமுதாய மேம்பாட்டிற்கு திட்டங்களை துவங்கி தாய் நாட்டிற்கு அர்ப்பணித்தல் ஆகிய மூன்று நிகழ்வுகளை உள்ளடக்கிய முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. வெட்டம்மாள், குணவதி, ராணி கமலவதி போன்ற மறைக்கப்பட்ட அறியப்படாத சாதனை பெண்களுக்கும் பெருமை சேர்த்தல் தமிழக வரலாறு மற்றும் கலாச்சாரத்தை வடிவமைப்பதில் பெண்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது. இப்படிப்பட்ட சாதனைப்பெண்களின் வாழ்க்கை வரலாறுகள் மறைக்கப்பட்டுவிட்ட காரணத்தினால் பரவலாக அறியப்படாமல் போய்விட்டது. அத்தகைய போற்றுதலுக்குரிய தாய்மார்களின் தன்னலம் கருதாத தவ வாழ்க்கை வெளிக்கொண்டு வந்து போற்றப்பட வேண்டும். தாயாக, மகளாக, மனைவியாக, சகோதரியாக, அரசியாக என்று பெண்மையின் பல்வேறுபட்ட பரிமாணங்களை நாம் இவர்களிடத்தில் காணமுடிகிறது.